சம்யுக்தா மேனன் நடித்துள்ள ‘பிளாக் கோல்ட்’ படப்பிடிப்பு நிறைவு!

தனுசுடன் வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதியுடன் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு மற்றும் லாரன்ஸ் உடன் பென்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். முதன் முறையாக ‘பிளாக் கோல்ட்’ என்ற படத்தில் அவர் கதையின் நாயகியாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள சம்யுக்தா, ‛‛கண்டிப்பாக இந்த பிளாக் கோல்ட் படம் எனது சினிமா கேரியரில் ஒரு மைல் கல் படமாக இருக்கும். இப்படத்தில் சண்டை காட்சிகளில் பலமுறை விபத்துக்களில் சிக்கி ரத்தம் சிந்தி நடித்தேன். விரைவில் இப்படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து படக்குழு அறிவிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading