நடிகை மிருணாள் தாக்கூர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தற்போது எனக்குக் காதலிக்க எல்லாம் நேரமே இல்லை. எனது கால்ஷீட் முழுமையாகப் படப்பிடிப்புகளால் நிரம்பியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரமில்லாத அளவிற்கு பிஸியாக இருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், எனது உடல்நலத்தைக் கவனிக்கக் கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. எனக்குக் காலில் தசைநார் கிழிவு (Ligament tear) ஏற்பட்டுள்ளது. எக்ஸ்ரே எடுத்த பிறகு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது காதலுக்கு எப்படி நேரம் ஒதுக்குவது?. யாரை காதலிக்கிறார் என்ற செய்திகளை விட, எனது திரைப் பயணத்தையும், நடிப்பையும் பற்றி மக்கள் பேச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
Add a Comment
