‌ஆளுமை உரிமை பாதுகாப்பைப் பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன்!

இன்றைய ஏஐ யுகத்தில் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என சினிமா பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடி ஆளுமை உரிமை பாதுகாப்பைப் பெற்று வருகிறார்கள். இதற்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், அக்ஷய்குமார், சல்மான் கான், அபிஷேக் பச்சன், மாதவன், இயக்குனர் கரண் ஜோஹர், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ்பாபு, நாக சைதன்யா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் இப்படி தங்களது ‘ஆளுமை உரிமை’யைப் பெற்றுள்ளார்கள். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனும் தற்போது ஆளுமை உரிமை பாதுகாப்பைப் பெற்றுள்ளார். இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவுக்கு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading