நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படும் காளி வெங்கட், அவ்வப்போது கதைநாயகனாகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் கதைநாயகனாக நடித்த ‘ஹவுஸ்மேட்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் அவர் மீண்டும் கதைநாயகனாக நடிக்கிறார்.
1995ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தக் கதையில், அரசு பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்க போராடும் அன்பான தந்தையாக காளி வெங்கட் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள ரேஷ்மா முரளிதரன் கதாநாயகியாக இணைந்துள்ளார். அப்பா–மகன் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் சென்னை மற்றும் சிவகங்கை பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை ஜென் மார்ட்டின் மேற்கொள்கிறார்.
இந்தப் படம் குறித்து காளி வெங்கட் கூறியதாவது: “இந்தப் படத்தில் நான் கதைநாயகன் அல்ல; கதையும், அந்தச் சிறுவனும் தான் உண்மையான நாயகர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
—
