‘பிக் பிட்சர்’ என்ற நிகழ்ச்சி ஜியோ ஸ்டார் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ் பதிப்பை நடிகர் பரத் தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என். சிம்ஹா மற்றும் இந்தியில் விஜய் ராஸ் ஆகியோர் தொகுப்பாளர்களாக இணைந்துள்ளனர். ஞாயிறுதோறும் 60 நிமிட எபிசோடாக 15 வாரங்கள் வரை ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி மூலம் பரத் தொகுப்பாளர் ஆகியுள்ளார்.
Add a Comment
