சவின் இயக்கத்தில் ஹஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், வினாயக் உள்ளிட்ட பலர் நடித்த மலையாள திரைப்படமான ‘வாழ 2’ ஏப்ரல் 2ஆம் தேதி வெளியானது. இந்த படம் தற்போது கேரள மாநிலத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
மலையாளத் திரைப்படங்களில் மிகக் குறுகிய காலத்தில் 100 கோடி வசூலை எட்டிய படமாக ‘வாழ 2’ புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனையை எட்டுவதற்கு வெறும் 15 நாட்களே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு மலையாளத்தில் கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த படங்களாக ‘துடரும்’ திரைப்படம் 19 நாட்களிலும், ‘லோகா’ திரைப்படம் 24 நாட்களிலும் இந்த இலக்கை எட்டியிருந்தன. ஆனால் ‘வாழ 2’ தற்போது மொத்தமாக 180 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. விரைவில் 200 கோடி வசூலையும் இந்த படம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
