‘டி55’ படத்திற்கான இசைப்பணிகளில் சாய் அபயங்கருடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், ‘இட்லி கடை’ மற்றும் ‘தேரே இஷ்க் மேயின்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ‘போர்தொழில்’ திரைப்பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகே டேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘டி55’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாகவும், சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘டி55’ படத்திற்கான இசைப் பணிகளில் சாய் அபயங்கர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பணியின் போது நடிகர் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தை அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading