பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் நானி நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் சௌரவ், இந்தப் புதிய படத்தையும் இயக்க உள்ளார்.
இந்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 18) அன்று இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வைரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ‘ஹாய் நான்னா’ திரைப்படத்துக்கு இசையமைத்த ஹேஷம் முகமது வஹாப் மீண்டும் இசையமைக்கிறார்.
ஆக்ஷன் கலந்த காதல் கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.
