மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தில் பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் புதிய படம் “பள்ளிச்சட்டம்பி”. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். கிறிஸ்துவ தேவாலயத்தை மையமாகக் கொண்டு 1980-களில் நடைபெறும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் புதன்கிழமை (ஏப். 15) திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தில் பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இவரது தோற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Add a Comment
