ரீ ரிலீஸில் கைகொடுக்காத திரிஷ்யம் 2?

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதன் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வரும் மே 21ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதற்கு முன்னதாக திரிஷ்யம் 2 பாகத்தை வெளியிட்டால் ரசிகர்கள் ஆர்வமுடன் காண வருவார்கள் என எதிர்பார்த்த தயாரிப்பு தரப்பிற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது ‘திரிஷ்யம் 2’ம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததுடன் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே திரையரங்குக்கு வந்ததால் தியேட்டருக்கான கட்டணத் தொகையை ஈடு கட்டுவதில் கூட ‘திரிஷ்யம் 2’ சிரமத்தை சந்தித்துள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading