சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!

தெலுங்கு திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகையாகத் திகழும் பாக்யஸ்ரீ போர்ஸ், தமிழில் ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மராட்டியத்தைச் சேர்ந்த இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இதற்கு மேலாக, பிற மொழித் திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், சமீப காலமாக அவர் லேசான கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், திரைப்பட விழாக்களிலும் அவரது தோற்றம் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததால், ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவருக்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால், ரசிகர்களின் மனநிலையை அறிய, மெதுவாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம்.

தற்போது, அவரது புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவில் ‘லைக்’கள் குவிந்து வருவதால், அவர் அதிக நம்பிக்கையுடன் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் திரையுலகில் புதிய பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading