பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். கடந்த 23 வருடங்களாக இசை பயணம் மேற்கொண்டு வரும் ஸ்ரேயா கோஷல் தமிழிலும் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தற்போது தெற்கு மும்பையில் வொர்லி பகுதியில் சுமார் 29.7 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் ஸ்ரேயா கோஷல். இது குறித்த தகவல் சமீபத்தில் பத்திரப்பதிவு துறையிலிருந்து சோசியல் மீடியா மூலமாக கசிந்துள்ளது. 5000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள, 2750 சதுர அடி கட்டுமானம் கொண்ட மூன்று கார் பார்க்கிங் வசதி கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றைத்தான் ஸ்ரேயா கோஷல் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
Add a Comment
