விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமாகி, பின்னர் நடிப்பில் ஆர்வம் கொண்டு, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
அதில் குறிப்பாக, சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம், விஜய் ஆண்டனியை முன்னணி ஹீரோவாக உருவாக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்று வரை பிரபலமான ஹிட் பாடலாக இருந்து வருகிறது. இந்த வெற்றிகரமான கூட்டணி தற்போது மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறது. அந்த உணர்வுப்பூர்வமான கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ‘நூறு சாமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெற்றிமாறன் சமீபத்தில் வெளியிட்டார். இந்தப் படம் வருகிற மே 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.இந்தப் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது ‘நூறு சாமி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
