நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த், தனது அடுத்த படைப்பாக ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, கவுதம் ராம் கார்த்திக் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தன்வீர் மிர் மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே நிறைவடைந்தன. உளவு துறை சார்ந்த திரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தணிக்கை வாரியம் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
