கவனத்தை ஈர்க்கும் பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ படத்தின் டிரெய்லர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது ‘டியூட்’ திரைப்படத்தின் வெளியீடு காரணமாக ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது. அதன்பிறகு பலமுறை வெளியீடு தள்ளிப்போனதால், படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நீண்டநாளாக காத்திருந்தனர்.

ரசிகர்களின் இந்தக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அற்புதமான ஒளிப்பதிவில் அறிவியல் புனைகதை அம்சங்களுடன் காட்சிகள் அமைந்துள்ளதால், அது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading