‘LIK’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

செவன் ஸ்கிரீன் நிறுவன தயாரிப்பில் அனிரூத் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.ஐ.கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) . பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்தாண்டே ரிலீஸாக வேண்டியது. அதன்பின் இருமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இறுதியாக வரும் ஏப்., 10ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள் துவங்கி உள்ளன. அதன்படி இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அதாவது இசை வெளியீட்டு விழா வருகிற ஏப்ரல் 6ம் தேதியன்று சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் மாலை நடைபெறுகிறது என அறிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading