நடிகை சோனா கபூருக்கு ஆண் குழந்தை!

பாலிவுட் நடிகையான சோனம் கபூர் பிரபல முன்னணி நடிகரான அனில் கபூரின் மகள். ஹிந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர் தான். 2018ல் ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சோனம் கபூர். 2022ல் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. வாயு கபூர் அகுஜா என மகனுக்கு பெயரிட்டனர்.இந்த நிலையில் கடந்த மார்ச் 29ம் தேதி இரண்டாவது முறையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சோனம் கபூர். இந்த நிலையில் தற்போது தனது குழந்தையை தான் அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சோனம் கபூர்.

Add a Comment

Leave a Reply