முதல்முறையாக மராத்திய மொழியில் நடிக்கும் அபிஷேக் பச்சன்!

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக மராத்தியில் வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ராஜா சிவாஜி’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார் அபிஷேக் பச்சன். இதில் சாம்ராஜ் சாகாஜி போஸ்ட்லே என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிஷேக் பச்சன்.இந்த படத்தை நடிகை ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் இயக்கியுள்ளார். அது மட்டுமல்ல சத்ரபதி சிவாஜி மகாராஜா கதாபாத்திரத்திலும் அவரே நடித்துள்ளார். வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்க ஜெனிலியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர அப்சல் கான் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் மே 1ம் தேதி இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading