மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான மும்பை நடிகை பூஜா ஹெக்டே, அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, இவர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, ரெட்ரோ மற்றும் கூலி போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்த ‘காஞ்சனா 4’ படங்களில் நடித்துள்ளார்.
ஹிந்தியில், பூஜா ஹெக்டே வருண் தவான் மற்றும் மிருணாள் தாக்கூருடன் இணைந்து ‘ஹை ஜவானி துஸ்கு ஹோனா ஹை’ படத்தில் நடித்தார். இந்த படத்தின் டப்பிங் பணிகளை தற்போது தொடங்கி, டப்பிங் ஸ்டுடியோவில் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், காதல் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகியுள்ள இப்படத்தை டேவிட் தவான் இயக்கியுள்ளார். மணிஷ் பால், மவுனி ராய், சங்கீ பாண்டி, ராகேஷ் பேடி, அலி அஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
