மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு விஜய் யேசுதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சிலை திறப்பு விழாவுடன் இணைந்து நடைபெறவுள்ள “சமம் சங்கீத மேகம்” எனப்படும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வு இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் அமைந்துள்ள வி.டி. பட்டதிரிபாட் நினைவிடம் வளாகத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வருகிற 31ஆம் தேதி இந்தச் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.
ஏற்கனவே ஐதராபாத் நகரில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாலக்காட்டில் நடைபெறும் இந்த விழாவிற்கும் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
