தனுஷின் ‘கர’ படத்தில் ‘கந்தசாமி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் கே‌.எஸ்.ரவிகுமார்!

தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர’. இந்தப் படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

கிராமப்புறத்தை மையமாகக் கொண்ட ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் வெளியான முதல் பார்வை போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், மமிதா பைஜு நடித்துள்ள கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் அவர் ‘செல்லி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் தற்போது கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ள கதாபாத்திர அறிமுக போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் ‘கந்தசாமி’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading