நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படமான ‘கருப்பு’ திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ‘காட் மோட்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘நாங்க நாலு பேரு’ என்ற இந்த பாடலை அசல் கோலார் எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்பு, அசல் கோலார் மற்றும் சாய் அபயங்கர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே ஒருபுறம் கவனத்தை ஈர்த்தாலும் மறுபுறம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
