தமிழ் சினிமாவில் ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் அறிமுகமான ஜீவா, ‘சிவா மனசுல சக்தி’, ‘கற்றது தமிழ்’, ‘ரவுத்திரம்’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் ‘பிளாக்’ மற்றும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது தனது 47வது படத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ் உடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இருவரும் இணைந்த ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்டோர் கேமியோவாக நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான புரோமோ வீடியோ ரசிகர்களை சிரிக்க வைத்ததுடன், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
