இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார், அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வதந்தி 2’ இணையத் தொடர் தயாராகியுள்ளது. இந்தத் தொடர், இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்தத் தொடரும், அதேபோல் ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியின் போராட்டங்களையும் விசாரணைச் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு தயாராகியுள்ளது. இந்தத் தொடரில் நடிகர் சசிகுமார், மூசா ராசா எனப்படும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், விரைவில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
