6 ஆஸ்கார் விருதுகளைப் பெற்று சாதனை படைத்த ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. இந்த ஆண்டின் விழாவில் ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று அதிக விருதுகளை பெற்ற படமாக சாதனை படைத்தது. அதே நேரத்தில் ‘அவதார் : பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கர் விருதை கைப்பற்றியது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக அதிக ஆஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படமாக பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கிய ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட மொத்தம் 6 விருதுகளை வென்று முதலிடம் பெற்றது. மேலும் ‘சின்னர்ஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஆட்டம் டூரால்ட் அர்காபாவ், ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விருதுகள் விவரம்:

சிறந்த சர்வதேச திரைப்படம் – ‘சென்டிமென்டர் வேல்யூ’ (நார்வே)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ‘கே பாப் டிமன் ஹன்டர்ஸ்’

சிறந்த அசல் திரைக்கதை – ரையன் கூக்லர் (‘சின்னர்ஸ்’)

சிறந்த தழுவல் திரைக்கதை – பால் தாமஸ் ஆண்டர்சன் (‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’)

சிறந்த பின்னணி இசை – லுட்விக் கோரன்சன் (‘சின்னர்ஸ்’)

சிறந்த பாடல் – ‘கோல்டன்’ (‘கே பாப் டிமன் ஹன்டர்ஸ்’)

சிறந்த படம் – ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’

சிறந்த இயக்குநர் – பால் தாமஸ் ஆண்டர்சன் (‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’)

சிறந்த நடிகர் – மைக்கேல் பி. ஜோர்டான் (‘சின்னர்ஸ்’)

சிறந்த நடிகை – ஜெஸ்ஸி பக்லி (‘ஹேம்னட்’)

சிறந்த துணை நடிகர் – சீன் பென் (‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’)

சிறந்த துணை நடிகை – ஏமி மேடிகன் (‘வெப்பன்ஸ்’)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – ‘தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்’

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ‘அவதார் : பயர் அண்ட் ஆஷ்’

சிறந்த ஒலி அமைப்பு – ‘எப்1’ திரைப்படம்

மேலும் இந்த ஆண்டின் ‘In Memoriam’ பகுதியில் இந்திய திரையுலகில் முக்கிய பங்களிப்பு செய்த தர்மேந்திரா, மனோஜ் குமார், பி. சரோஜா தேவி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading