‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி தனது திரை வாழ்க்கையை முதலில் இசையமைப்பாளராக தொடங்கினார். பின்னர் நடிப்பிலும் ஆர்வம் காட்டிய அவர் ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நடிகராகவும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படமும் பிச்சைக்காரன் படத்தை போன்று உணர்வுபூர்வமான கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அந்த படத்திற்கு ‘நூறு சாமி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் வருகிற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading