விஜய் சிறப்பாக நடனமாடுவதில் வல்லவர் – நடிகை தமன்னா டாக்!

நடிகை தமன்னா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தனது சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, தற்போது ‘புருஷன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறேன். முதன்முதலில் நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றதாக கூறினார். அந்த திரைப்படத்தின் கதை முழுவதும் கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது என்றும், கல்லூரியில் படிக்கும் காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் மாணவர்கள் முழுமையாக அனுபவித்து மகிழ வேண்டும் என்றும் கூறினார். வாழ்க்கையில் அந்த பருவம் மீண்டும் திரும்பி வராது என்பதால் அந்த காலத்தை மதித்து அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த 21 ஆண்டுகளாக சினிமா துறையில் தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்றும், ரசிகர்கள் அளித்து வரும் அன்பும் ஆதரவும் தான் என்னை இவ்வளவு ஆண்டுகள் நிலைத்திருக்கச் செய்துள்ளது.

அதே நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குறித்து பேசும்போது, அவர் மிகவும் எளிமையான மற்றும் மென்மையான குணம் கொண்ட மனிதர் என்று தமன்னா கூறினார். நடன திறமை குறித்து பேசும்போது, தற்போதைய நடிகர்களில் மிகச் சிறப்பாக நடனம் ஆடுபவர்களில் விஜய் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள் என்றும், அவர்களின் நடன திறமை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடிகர் அஜித் குறித்து பேசும்போது, ‘வீரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தை நினைவுகூர்ந்தார். அந்த நேரத்தில் கேரவனில் வைத்து தமக்காக அஜித் இட்லி செய்து கொடுத்த சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். அஜித்திற்கு சமையல் செய்வது மிகவும் பிடித்த ஒன்று என்றும், அவர் மிகவும் நல்ல மனம் கொண்டவர், மென்மையான குணம் கொண்டவர் மற்றும் சிறந்த குடும்ப வாழ்க்கையை மதிக்கும் மனிதர் என்றும் தமன்னா அவரை பாராட்டி பேசியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading