தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது உடல் எடை குறைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “வயது அடிப்படையில் பார்த்தால் உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. தற்போது எனக்கு 55 வயதாகிவிட்டது. இதுவரை எனக்கு பிபி அல்லது சர்க்கரை நோய் எதுவும் இல்லை. அவை வந்தால் அது பெரிய பிரச்சினையாக மாறிவிடும். ஏற்கனவே குடும்ப பாரம்பரியமாக மைக்ரேன் மற்றும் சைனஸ் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு மேல் வேறு எந்த உடல்நலப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு கட்டத்தில் எனது உடல் எடை மிகவும் அதிகரித்துவிட்டது. ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது என் எடை 98 கிலோ இருந்தது. இன்னும் இரண்டு கிலோ அதிகரித்திருந்தால் 100 கிலோ ஆகியிருக்கும். வீட்டில் மேலே கீழே செல்லும்போது முழங்கால் வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருந்தது. அதை கவனித்த பிறகே எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்,” என்று கூறினார். , “என் முகத்தை பார்க்கும்போது எனக்கே வித்தியாசமாக தோன்றியது. என் மருத்துவரும் மூட்டுவலி குறையவும், பிபி மற்றும் சர்க்கரை நோய் வராமல் இருக்கவும் எடையை குறைக்க வேண்டும் என்று கூறினார். அதனால் கோவிட் காலத்திலிருந்து மெதுவாக உடல் எடையை குறைக்கத் தொடங்கினேன். ஆரோக்கியமாக இருப்பதுதான் மிகவும் முக்கியம்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “திரையுலகிற்கு நான் முதலில் வந்தபோது மிகவும் ஒல்லியாக இருந்தேன். அப்போது ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் எடை அதிகரித்தபோதும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது மீண்டும் எடை குறைத்திருக்கிறேன். இதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ‘சின்னத்தம்பி’ திரைப்படத்திற்குப் பிறகு ‘சிங்காரவேலன்’, ‘உத்தமராசா’ போன்ற படங்களில் நடித்தபோது கூட ‘குஷ்பூ எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார், எங்கு சென்று நிறுத்துவார்?’ என்ற விமர்சனங்கள் வந்தன. பட விமர்சனங்களிலும் அவை
