‘எம்போஹெர்’ விருது பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனி!

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைந்து ‘எம்போஹெர்’ விருதுகள் வழங்கியது. இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாசார, அறிவியல் அல்லது பொது வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.இந்த விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு, திரைப்படம் மற்றும் கர்நாடக இசைப் பிரிவில் சிறந்து விளங்குவதற்கான ‘எம்போஹெர்’ விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பத்ம பூஷண் விருது பெற்ற பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் சவீதா குழும நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என். எம். வீரையன் மாரப்பன் வழங்கினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading