தயாரிப்பாளரும், இயக்குனருமான தக்காளி சீனிவாசன் காலமானார்!

தயாரிப்பாளர்-இயக்குநர்-இசையமைப்பாளர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை (மார்ச் 11) பெங்களூருவிலேயே நடைபெறவுள்ளன. ‛இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், ஜென்ம நட்சத்திரம், அதிசய மனிதன், விட்னஸ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளராக திகழ்ந்தார். மேலும், கமல்ஹாசன் நடித்த ‛சூரசம்ஹாரம்’ திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் அவர் ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading