தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் ‘ஏசியன் அல்லு சினிமாஸ்’ என்ற பெயரில் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் என்ற இடத்தில் ஏற்கெனவே மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அடுத்து கொகபேட் என்ற இடத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டரை மார்ச் 18ல் திறக்க உள்ளார்கள்.75 அடி அகலம் கொண்ட டால்பி சினிமா தியேட்டர் ஒன்றும் அதில் அடங்கும். ஆசியாவிலேயே மிகப் பெரிய டால்பி சினிமா தியேட்டராக அது திறக்கப்பட உள்ளது. 644 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட ஹைதராபாத்தின் முதல் டால்பி சினிமா தியேட்டர் என்ற பெருமையுடன் ஆரம்பமாகிறது. தியேட்டரை முறைப்படி நாளை மார்ச் 12 அன்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்க உள்ளார். அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.
Add a Comment
