பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்ற ரியா, சின்ன திரையில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்குப் பிறகு நிரோஷா – ஸ்டாலின் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ள ‘லட்சுமி மெஸ்’ தொடரில் ரியா நடிக்கவுள்ளார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கனா கண்டேனடி, அழகே அழகு, சுட்டும் விழிச் சுடரே என மூன்று தொடர்கள் அறிமுகமாகியுள்ளன. இவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.தற்போது லட்சுமி மெஸ் என்ற புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
Add a Comment
