சமந்தா நடிக்கும் ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

நடிகை சமந்தா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தயாரிப்பதாக முன்பு அறிவித்த முதல் படம் ‘மா இன்டி பங்காரம்’ ஆகும்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார். இதில் சமந்தாவுடன் கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்திற்கு இயக்குநரும் சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading