‘கல்கி 2898 ஏ.டி – 2 படத்திற்கான கமல்ஹாசன் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான புது தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், 2024ஆம் ஆண்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் நடித்த வித்யாசமான கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. கமல்ஹாசனின் வலுவான நடிப்பு இந்த படத்தில் முக்கியமான அம்சமாக பேசப்பட்டது.

இதற்கிடையில் ‘கல்கி 2898 ஏ.டி.’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த தொடர்ச்சிப் படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள கதாபாத்திரம் மேலும் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ‘கல்கி 2898 ஏ.டி. 2’ திரைப்படத்திற்காக கமல்ஹாசன் பெற்றுள்ள சம்பளம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவல்களின் படி இந்த படத்தில் சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை நடித்ததற்காக கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சினிமா துறையில் மிகவும் குறைந்த நாட்கள் நடித்ததற்காக இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பை காண ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading