சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை ரச்சிதா மகாலட்சுமி, பின்னர் வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார். ‘பயர்’ மற்றும் ‘எக்ஸ்டிரீம்’ போன்ற திரைப்படங்களில் நடித்த அவர் தனது நடிப்பால் கவனம் பெற்றார். குறிப்பாக ‘பயர்’ திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் ‘99/66’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கத் தயாராக இருப்பதாக ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவே தனது பணியை செய்து வருகிறேன் என்று கூறினார். கதாநாயகர்களுக்கு வெறும் ஜோடியாக மட்டும் தோன்றும் கதாபாத்திரங்களில் நடிக்க தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். தனது நடிப்பிற்கு உண்மையான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.அந்த வாய்ப்பு கிடைக்காத இடங்களில் தன்னால் பணியாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தன்னை வளர்த்தெடுத்த சின்னத்திரையை மீது எனக்கு என்றும் அன்பு உள்ளது. சின்னத்திரை தொடர்களில் நடித்தால் திரைப்படங்களில் நடிக்க நேரம் கிடைக்காது என்பதால் பல திரைப்பட வாய்ப்புகளை முன்பே நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போதும் தமிழில் சின்னத்திரை வாய்ப்புகள் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறினார். காரணம் அங்கு தனது நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். ஒரு நல்ல நடிகர் அல்லது நடிகைக்கு தேவையான அனுபவங்களும் வாய்ப்புகளும் சின்னத்திரையில் அதிகமாக கிடைக்கும் என்றும் அவர் கூறினார். வெள்ளித்திரையில் போட்டி அதிகமாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் சில அளவுக்கு குறைவாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார். அதனால் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சின்னத்திரையிலும் நடிக்கத் தயார் என்று ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார
