மது, புகை போன்ற தவறான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்…அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி… நடிகர் சதீஷ் வேண்டுகோள்!

தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள திரைப்படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இந்தப் படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் மோனிகா சின்கொட்லா, மஹிமா, தேவிகா ஆகியோர் கதாநாயகிகளாக இணைந்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இந்தப் படத்திற்கான இசையை அமைத்துள்ளார். திரைப்படம் வருகிற 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சதீஷ், “இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான படமாக இருக்கும். ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் நட்பு பற்றிய பாடல் நினைவுக்கு வரும். அந்த உணர்வை மையமாகக் கொண்டு நட்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல வெற்றிப் படங்களை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த திரைப்படத்தில் பெண்கள் மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதனால் எந்த தவறான கருத்தையும் பரப்ப விரும்பவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றாலும், பெண்கள் பல துறைகளில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள். பெண்களை நாம் தெய்வத்துடன் ஒப்பிடுகிறோம். எனவே யார் மது அருந்தினாலும் அது தவறுதான் என்ற எண்ணமே எனக்குள்ளது. நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட் அல்லது மது போன்றவற்றைத் தொடவில்லை. இதை நான் பெருமையாகச் சொல்லவில்லை. ஆனால் என் கருத்தை கேட்டு சிலர் தவறான பழக்கங்களைத் தவிர்க்க முடிவு செய்தால் அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading