800 நாட்களைக் கடந்த ‘மகாநதி தொடர்’

தந்தையின்றி நான்கு மகள்களை வளர்க்கும் தாயின் கதையாகத் தொடங்கிய இந்தத் தொடரில் தற்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று, திருமண வாழ்வில் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இத்தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், காவியா, சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோரின் நடிப்பும் முக்கிய பலமாக அமைந்துள்ளது.2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 800 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக சிறப்பு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading