ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நடிகர் அஜித்குமாரின் அண்ணன் அனில் குமார்!

நடிகர் அஜித்குமாரின் அண்ணன் அனில் குமார் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றிய தகவலை அனில் குமார் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”திருமண தகவல் சேவை நடத்தி வரும் நான், தற்போது ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறேன். ‘கோகோ அண்ட் நட்’ என்ற சர்வதேச ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளேன். இப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரமாக அல்லாமல், நிஜ வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான மேட்ச் மேக்கராக (திருமண புரோக்கர்) இருப்பது போலவே, திரையிலும் மிஸ்டர் மேட்ச் மேக்கராகவே நடிக்கவுள்ளேன்” என அனில் குமார் பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading