இஸ்ரேல் – இரான் போர் காரணமாக துபாயில் சிக்கித்தவிப்பவர்களுக்கு பிரபல நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், துபாயில் தங்க இடமின்றி தவிப்பவர்கள் தன்னை தொடர்பு கொண்டால், பாதுகாப்பான தங்குமிட வசதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்த X தளப் பதிவில் அவர், “போர் காரணமாக பல பயணிகள் துபாயில் சிக்கித் தவிக்கின்றனர். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ தங்குவதற்கு இடம் இல்லையென்றால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்குகிறோம். தேச பேதம் கிடையாது, நிபந்தனைகள் இல்லை. மனிதாபிமானம் மட்டும் போதும். உதவி தேவைப்பட்டால் இன்ஸ்டாகிராமில் DM அனுப்புங்கள். தேவைப்படும் ஒருவரைச் சென்றடைய இதைப் பகிரவும்,” என குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
