2022ஆம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் மீண்டும் கதாநாயகனாக இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் மற்றும் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ளார்.
இப்படம் குறித்து படக்குழுவினர் பேசுகையில், நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் மோதலே இப்படத்தின் மையக் கதை. அதிரடி மற்றும் சுவாரஸ்ய அம்சங்கள் நிறைந்த இந்தப் படம், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ‘லீடர்’ திரைப்படத்தின் டீசர் வருகிற 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
