யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘வெஞ்சென்ஸ்’ திரைப்படம்!

சின்னத்திரையில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. அதனைத் தொடர்ந்து ‘தேன்’, ‘ஜெயில்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பின்னர் ‘இறுகப்பற்று’ திரைப்படத்தில் நடித்த அவர், அதிலுள்ள தனது கதாபாத்திரத்தால் அதிக பாராட்டுகளை பெற்றார்.

தற்போது அபர்ணதி, அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘வெஞ்சென்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏசி புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் ராகுல் அசோக் கூறுகையில், “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் அரசியல் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தரமான படங்களுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் தமிழ் ரசிகர்கள், ‘வெஞ்சென்ஸ்’ படத்திற்கும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். பல குறும்படங்களை இயக்கிய அனுபவத்துடன் தற்போது முழுநீள திரைப்படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.

‘வெஞ்சென்ஸ்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வருகிற _allocate 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading