சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் மாயாஜாலம் காட்டும் ஒரு வித்தைக்காரர் – நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு!

இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ குறித்து புதிய தகவலை நடிகர் சுராஜ் பகிர்ந்துள்ளார்.

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படத்தில் சுராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கான ஒரு நேர்காணலில் பேசிய அவர், “ஜெயிலர் 2 திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படம் முதல் பாகத்தை விட இன்னும் சிறப்பாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நீண்டநாளாக ரஜினி சாரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி சார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் உண்மையிலேயே ஒரு வித்தைக்காரர்,” என்றார். தொடர்ந்து பேசிய சுராஜ், “தனுஷ் சார் ஒரு முன்னணி நட்சத்திரம். ஒருபுறம் வணிக ரீதியான படங்களில் நடிப்பதுடன், மறுபுறம் ‘மரியான்’ மற்றும் ‘அசுரன்’ போன்ற உள்ளடக்க முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,” என்று பாராட்டினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading