நடிகை சமந்தா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாகும். இருப்பினும் அவர் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் இந்த திரைப்படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் கவுதமி மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இந்த திரைப்படத்திற்கான கதையை இயக்குநரும் சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு எழுதியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.
‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு வரும் மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
