ஆல்பம் பாடலுக்காக சாய் அபயங்கருடன் ஜோடி சேரும் நடிகை கயாடு லோஹர்!

தமிழ் சினிமாவில் இன்றைய தலைமுறையினரின் பிரியமான இசையமைப்பாளராக மாறி உள்ளார் சாய் அபயங்கர். கட்சி சேர…, ஆச கூட ஆகிய ஆல்பம் பாடல்களில் பிரபலமான இவர் தற்போது தமிழில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார்.இந்த நிலையில் சாய் புதிதாக இசையமைத்து, பாடி, நடனமாடியுள்ள ஆல்பம் பாடலை வருகிற மார்ச் 5ல் வெளியிடுகிறார். ஏற்கனவே இவர் ஆல்பம் பாடல்களில் சம்யுக்தா, பிரீத்தி முகுந்தன், மீனாட்சி சவுத்ரி, சான்வீ மேக்னா ஆகியோருடன் இணைந்து நடனமாடினார். இந்த புதிய ஆல்பத்தில் ‛டிராகன்’ பட புகழ் கயாடு லோகர் உடன் இணைந்து ஆடி, பாடி உள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading