‘கோலி சோடா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குநர் விஜய் மில்டன், தற்போது ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன், தனது ரப் நோட் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். மேலும், தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் ராஜ் தருண் இந்த புதிய திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
‘கோலி சோடா’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
