முழுக்க முழுக்க ஆக்சன் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மிராக்கிள்’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்தா பேமிலி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ரமேஷ் எக்கிடி, ஸ்ரீகாந்த் மோகடாசு மற்றும் சந்தர் கவுட் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
‘சத்ய காங்க்’ மற்றும் ‘பைட்டர் சிவா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபாஸ் நிம்மலா இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஹெபா பட்டேல் நடித்துள்ளார். ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வருகிற 24ஆம் தேதி ஐதராபாத் சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்க உள்ளது. அந்த கட்டத்தில் ஹெபா பட்டேல் படக்குழுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தில் ரந்தீர் பீசு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் மூத்த நடிகர்களான ஸ்ரீராம் மற்றும் சுரேஷ் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘மிராக்கிள்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
