சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பெரும்பாலான இல்லத்தரசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. ஒருசில தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் எடுக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த எதிர்நீச்சல் -2 தொடர் சமீபகாலமாக டிஆர்பி புள்ளிப் பட்டியலில் சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் புள்ளிப் பட்டியலில் முன்னேறி வருகிறது. டிஆர்பிக்காக புதிய பாத்திரங்களை எதிர்நீச்சல் – 2 தொடர் அறிமுகம் செய்து வந்தாலும், கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால், தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் இந்த வாரம் 8.03 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
Add a Comment
