பெங்களூரு நகரின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தரமாக மூடல்!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு, லால்பாக் பகுதியில் உள்ள நிரந்தரமாக மூடப்படுகிறது. 1970களில் கட்டப்பட்ட இந்தத் தியேட்டரில் 1100 இருக்கைகள் உள்ளன. காலத்திற்கேற்ப 4கே டிஜிட்டல், டால்பி அட்மாஸ் சவுண்டு என தன்னை மாற்றிக் கொண்டே வந்த இந்தத் தியேட்டர் நீதிமன்ற உத்தரவு காரணமாக மூடப்படுகிறது. நிலத்தின் உரிமையாளர்கள், தியேட்டர் நிர்வாகத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் நில உரிமையாளர்கள் வெற்றி பெற்றனர். 2018ம் ஆண்டே நிலத்திற்கான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாம். அதன்பின் இருதரப்பும் நீதிமன்றத்தை அணுகியதால் தற்போது வரை வழக்கு நடந்து வந்தது. இந்தத் தியேட்டரில் அதிகமான தமிழ்ப் படங்கள் வெளியாவது வழக்கம். ரஜினிகாந்த் நடித்த மூன்று படங்கள் இங்கு ஒரு கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது. சிங்கிள் தியேட்டர்களை தற்போது நடத்துவது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. பெங்களூரு ஊர்வசி தியேட்டர் மூடப்படுவது அதன் சினிமா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading