புதிய படத்திற்காக நடிகர்களைத் தேடும் ரிஷப் ஷெட்டி! கலபுராகியில் நடைபெற்ற ஆடிஷன்!

‘கேஜிஎப்’ படங்களுக்குப் பிறகு ‘காந்தாரா’, ‘காந்தாரா சாப்டர் 1’ ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் கவனிக்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. இந்தப் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரிஷப் ஷெட்டி தனது பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், ரிஷப் ஷெட்டி மியூசிக் என்ற நிறுவனத்தையும் தொடங்கி, ‘ஹுப்பலி ஹன்டர்ஸ்’ படத்தின் இசை உரிமையையும் பெற்றுள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்க ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளார். இதற்காகப் புதிய முகங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாகப் பெங்களூருவில் ஆடிஷன் நடத்தப்பட்டது. தொடர்ந்து, வட கர்நாடகாவில் உள்ள கலபுராகி நகரத்திலும் ஆடிஷன் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிஷப் ஷெட்டி இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், அதற்கான ஆரம்பகட்டப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை அவரே தயாரித்து, இயக்கி, நடிக்க உள்ளதாகச் சாண்டல்வுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading