தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ‘வித் லவ்’ தயாரிப்பாளர்கள்!

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா கிராபிக் டிசைனராக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பிறகு கோவா படத்தை தயாரித்தார். வேலையில்லா பட்டதாரி 2, படத்தை இயக்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் உடன் இணைந்து அவர் தயாரித்துள்ள படம் ‘வித் லவ்’. ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்த இந்த படம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சவுந்தர்யா தனது சக தயாரிப்பாளர்களுடன் இணைந்து தமிழக முதல்வரை சந்தித்து படத்தின் வெற்றிக்கு வாழ்த்தும், ஆசியும் பெற்றார். ‘வித் லவ்க் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார் முதல்வர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading